Our Journey to Natural Health
"At Maavel, our mission goes beyond business. We are deeply committed to restoring traditional agricultural practices and revitalizing soil health by replacing invasive species with native flora. By eliminating intermediaries, we ensure that our farmers receive fair compensation while our customers receive the purest, chemical-free products. From cleaning over 400 water bodies to supporting rural farming communities, every purchase you make at Maavel contributes to a larger vision of a greener, healthier, and more sustainable future for Tamil Nadu and beyond."


எங்களைப் பற்றி - மாவேள் குழுமம்
2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மாவேள்’ என்பது வெறும் வணிக நிறுவனமல்ல; இது ‘மாற்று வேளாண்மையின்’ ஒரு முன்னெடுப்பு. சீமை கருவேலமரங்களால் சிதைக்கப்பட்ட நிலங்களை மீட்டு, இயற்கையான விவசாய முறைகளை மீட்டெடுத்து, அந்த விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் பயணத்தின் தொடக்கப்புள்ளி.
எங்கள் பயணம்: இயற்கையை நோக்கிய ஒரு மீள்வருகை
எழுச்சியும் வளர்ச்சியும்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 89 இடங்களில் மாவேள் அவுட்லெட்டுகளைத் திறந்து, குறுகிய காலத்திலேயே வலுவான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கினோம். எங்கள் வெற்றியின் ரகசியம் தரமான தயாரிப்புகள் மட்டுமல்ல; எங்களின் சமூகப் பணிகளும் தான். எங்களின் வருவாயைக் கொண்டே தமிழகமெங்கும் 400-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளைச் சுத்தம் செய்துள்ளோம், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற விவசாய நிலங்களைச் சீரமைத்து மாற்று மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறோம்.
சவால்களைக் கடந்த உறுதி
எங்கள் வளர்ச்சி, பொதுமக்களின் ஆதரவு மற்றும் இயற்கைக்கு எதிரான கார்பொரேட் நிறுவனங்களின் கண்களை உறுத்தியது. லாபநோக்கம் கொண்ட நிறுவனங்களின் சதித் திட்டங்கள், பொய் வழக்குகளால் நிறுவனர் திரு. ஏனாதி பூங்கதிர்வேல் அவர்கள் எதிர்கொண்ட சிறைவாசம் எனப் பல சோதனைகள் குறுக்கிட்டன. எனினும், சமூக நலன் சார்ந்த போராட்டங்களில் உறுதியாக நின்றதால், சட்டத்தின் துணையோடு நீதியை நிலைநாட்ட முடிந்தது. இக்கட்டான சூழலிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையதள விற்பனையின் மூலம் மாவேள் மீண்டும் மீண்டு வந்தது.
இன்று மாவேள் குழுமம்
இன்று மாவேள், பல்வேறு தளங்களில் இயற்கையோடு இணைந்து வெற்றிநடை போடுகிறது:
கஞ்சகம் உணவு மருத்துவமனை & Ai ஆய்வகம்
ஜோதிட ஆய்வகம்
18 மூலிகை மாடித்தோட்டம்
இன்ஸ்டன்ட் ஹெர்பல் கருப்பட்டி காபி கடை
கிராம இலவச காய்கறித் தோட்டம்
மாவேள் வெப் சொலுஷன்ஸ்
எங்கள் நோக்கம்
"மாவேள் என்பது வெறும் இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் அல்ல; இந்த பிரபஞ்சம் மக்களுக்கு வழங்கிய ஒரு அருட்கொடை." இயற்கையோடு இணைவோம், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுப்போம்!
அன்புடன், மாவேள் குழுமம்.
Get in Touch
Questions? We're here to help you naturally.

